முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்தால் பிராவோ விலகல்: குஜராத் அணியில் இடம் பிடித்தார் இர்பான் பதான்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய பிராவோ-வுக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் களமிறங்க உள்ளார்.

காயத்தால் விலகல்
10-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த வெய்ன் பிராவோ காயம் காரணமாக ஒரு போட்டிகள் கூட ஆடாமல் இருந்தார். மேலும், காயம் சரியாகாததால் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக தன்னுடைய சொந்த நாட்டிற்கு அவர் திரும்பியுள்ளார்.

குஜராத் அணியில் ...
இந்நிலையில், பிராவோவின் இடத்தை நிரப்ப இந்திய அணியின் முன்னாள் இடது கை பந்து வீச்சாளர் இர்பான் பதானை தேர்ந்தெடுத்து குஜராத் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வீரர்களின் ஏலத்தின் போது இரு முறை இடம் பெற்றும் இர்பான் பதானை எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை. 102 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான் 80 விக்கெட்டுகள் மற்றும் 1137 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்