முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் அட்ரீனல் கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை: மருத்துவமனை முதல்வர் மருத்துவர்.பி.கனகராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      சேலம்

 சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் அட்ரீனல் கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இது குறித்து அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர்.பி.கனகராஜ் தெரிவித்ததாவது :

சாதனை

நமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஸ்குமார் இவரது மனைவி ரத்தினா (30 வயது) கடந்த இரண்டு வருடங்களாக வியிற்றுவலி மயக்கநிலை மாதவிடாய் குறைபாடு மற்றும் நீர்ழிவு நோயினால் தாக்கப்பட்டு பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பலநின்றி அவதிப்பட்டு வந்தார். பின்னர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவினை நாடி வந்தார் அவருக்கு இங்கு தைராய்டு குறைபாடு கட்டுபாடற்ற சர்க்கரை நோய் மற்றும் சில ஹார்மோன் ஏற்றத்தாழ்வு கண்டறியப்பட்டு பொது அறுவை சிகிச்சை துறைத்தலைவர் மருத்துவர்.சி.இராஜசேகரன் அவர்களின் தலைமையில் உள்நோயளியாக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், ஸ்கேன் கொண்டு இடதுபக்க சிறுநீரகம் மேல் அமையப்பட்டுள்ள அட்ரீனல் என்னும் நாளமில்லா சுரப்பியில் 10 , 9 கட்டி இருப்பதை கண்டறியப்பட்டது இவரது இரத்த அழுத்தம் தைராய்டு குறைபாடு மற்றும் சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வு சீரமைக்கப்பட்டு மருத்துவக்கண்கானிப்பாளர் மருத்துவர்.எம்.இராஜசேகர் மற்றும் மருத்துவர் சம்பத்குமார் அவர்களின் ஆலோசனை படி சிறுநீரக அறுவைசிகிச்சைதுறை தலைவர் மருத்துவர்.செல்வராஜ், நாளமில்லா சுரப்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்.க.பூங்கொடி மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்.நாகராஜ் கொண்ட குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டவர் பெருந்தமணி மற்றும் சிறுநீரக இரத்தகுழாயை சூழ்ந்திருந்த 350 கிராம் எடை கொண்ட அட்ரீனல் கட்டியை சவாலாக ஏற்று முழுமையாக அகற்றினர்.

இதை போன்ற அரியவகை அட்ரீனல் கட்டிக்கான பிரதான அறுவை சிகிச்சை சென்னை, கோவை, மதுரையை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அறுவைசிகிச்சை சேலம் மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் முதன் முறையில் செய்யப்பட்டிருப்பது சேலம் மருத்துவமனையின் சாதனையில் ஒரு மைல்கல். இவ்வாறு அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர்.பி.கனகராஜ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்