முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றில் நுழைய வாய்ப்பு இன்னும் இருக்கிறது

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : ஐ.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பு உள்ளது.

முன்னணி வீரர்கள்

ஐ.பி.எல். 10-வது சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு காரணம் அந்த அணியில் கெய்ல், விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேதர் ஜாதவ் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

6 போட்டிகளில் தோல்வி

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆர்.சி.பி. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.சி.பி. 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை. இதன் மூலம் 5 புள்ளிகள் பெற்றுள்ளது.

முன்னேற முடியும்

இன்னும் ஐந்து போட்டிகள் மட்டுமே உள்ளதால் ஆர்.சி.பி. அணியால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்று ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நேற்று ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை ஆர்.சி.பி. அணி எதிர்கொள்கிறது. இதில் தோற்றால் கூட பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

அவைகள் வருமாறு:-

1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகள் உள்ளது. ஐந்திலும் வெற்றி பெற்றால் 15 புள்ளிகள் பெறும்.
2. கொல்கத்தா நைட் ரைடரர்ஸ் அணி தற்போது 9 போட்டியில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் உள்ள ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் இறுதியில் 20 புள்ளிகள் பெறும்.
3. மும்பை இந்தியன்ஸ் தற்போது 8 போட்டியில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள 6-ல் மூன்றில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் பெறும்.
4. சன்ரைசர்ஸ் அணி மீதமுள்ள ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடிக்கும்.
5. ரைசிங் புனே எஞ்சியுள்ள 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்தால் 10 புள்ளிகள் பெறும்
6. குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மீதமுள்ள போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற வேண்டும்.
7. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மீதமுள்ள போட்டியில் இரண்டில் வெற்றி பெற வேண்டும்.

இப்படி நடந்தால் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், மும்பை இந்தியன்ஸ் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடிக்கும்.

குஜராத் அணி 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும் பெறும், ரைசிங் புனே, கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் 10 புள்ளிகள் பெற்று முறையே 6-வது இடத்தில் இருந்து 8-வது இடத்தை பிடிக்கும். இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பெங்களூரு அணிக்கு ரன்ரேட் ஏதும் பார்க்காமலேயே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்