முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து கோயில் சூறை

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்து கோயிலை சூறையாடிய நாசக்காரர்கள் அங்கிருந்த சாமி சிலைகளை எடுத்து கால்வாயில் தூக்கி வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிலைகள் உடைப்பு
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தாட்ட மாவட்டத்தில் உள்ள காரோ என்ற பகுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வழிபாட்டுக்காக இங்குள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்த நாசக்காரர்கள் கோயிலை சூறையாடியதுடன் அங்கிருந்த சாமி சிலைகளை உடைத்து அருகாமையில் உள்ள கால்வாயில் தூக்கி வீசி சென்றுள்ளனர்.

மக்கள் வேதனை
நேற்று முன்தினம் பின்னிரவு சுமார் ஒரு மணியில் இருந்து நேற்று அதிகாலை ஐந்து மணிக்குள் நடைபெற்றதாக கருதப்படும் இந்த அத்துமீறல் தொடர்பாக மத அவமதிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரிகிறது. தங்களது வணக்கஸ்தலத்தை நாசப்படுத்தியதுடன் தெய்வச் சிலைகளை உடைத்து கால்வாய்க்குள் வீசிச் சென்ற சம்பவம் இங்குள்ள இந்து மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்