முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைஊராட்சி ஒன்றியம் ,கல்லாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மே தின கிராமசபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி கலந்து கொண்டார்

திங்கட்கிழமை, 1 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  265  ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு  கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைஊராட்சி ஒன்றியம் கல்லாபுரம்  ஊராட்சியில் நடைபெற்ற மே தின கிராமசபை கூட்டத்தில்  சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி கலந்து கொண்டார்.

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம்

இக்கூட்டத்தில், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம்(ஏPனுP) குறித்தும், அந்தியோதயா இயக்கம் குறித்தும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், பொது நிதி 2017-2018 லிருந்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் குறித்தும், கிராம ஊராட்சி எல்லைக்குள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிப்பது, கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், குழுக்களுக்கு ஒத்துழைப்பு, கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றியும், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் குறித்து, தாய் திட்டம் 2016-17 குறித்தும், ஊராட்சிப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும், மகளிர் திட்டம் குறித்தும், புதுவாழ்வு திட்டம் ,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவது குறித்தும்,  இதரப்  பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கான அசோலா தீவனம் வளர்ப்பது குறித்தும்  இக்கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்   தெரிவித்ததாவது-

கிராம சபை கூட்டம்

கிராம  ஊராட்சிகளில்  ஒவ்வொரு  ஆண்டும்  மே  1 ம்  தேதி,  அக்டோபர்  2 (காந்தி ஜெயந்தி), குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கிராம சபை கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான பல வளர்ச்சி திட்ட பணிகளுக்கும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வது போன்ற  முக்கிய  தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதால் கிராம பொது மக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும், சுகாதாரத்தை காத்து கொள்ள தனிநபர் கழிப்பிடம் அவசியம் அமைத்திட  வேண்டும். 
     நமது ஊராட்சியில் தனி நபர் இல்லக் கழிப்பிடம் கட்டுவதற்காக 266 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு 102 வீடுகளில் பணி நிறைவடைந்துள்ளது.  மீதமுள்ள 164 வீடுகளில் பணிகளை விரைந்து முடித்திட  வேண்டும் எனவும், இதன் மூலம் ஊரே சுத்தமாகும், நோய்கள் நம்மை அண்டாது, எனவே ஒவ்வொருவருக்கும் நமது இல்லத்தில் கழிப்பறை கட்ட வேண்டும் என்ற மனமாற்றம் ஏற்பட வேண்டும். தனிநபர் கழிப்பிடம் கட்ட ரூ. 12 ஆயிரம் நிதி அரசின் மூலம் வழங்கப்படுகிறது. ஆகவே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக திகழும் கழிப்பறையை கட்ட அனைவரும் முன் வரவேண்டும். மற்றும் சுகாதாரமாக இருப்பதற்கு அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்   தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில்,  மாவட்ட வன அலுவலர் பெரியசாமி,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) மைக்கேல், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் சாதனைகுறள் ,உதவி இயக்குநர் (கிராம ஊராட்சிகள்) பாலசுப்பிரமணி,உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்