முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில்தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

திங்கட்கிழமை, 1 மே 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் நொச்சியம் ஊராட்சியில் நேற்று (01.05.2017) நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கலந்து கொண்டார்.

 கிராமசபை கூட்டம்

இக்கூட்டத்தில் நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, சுகாதாரம், மாகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதிதிட்டம், இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களுடன் விவாதிக்கப்பட்டது. ஊராட்சியில் குடிநீர் வழங்கும் பணி, சுகாதாரம், பால் உற்பத்தி, மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் வேலைத்திட்டத்தில் ஊதியம் அளிக்கபடுவது, தெரு விளக்குகள், குழந்தைகள் மைய செயல்பாடு, அடிப்டை கட்டமைப்பு வசதிகள் கழிப்பிட வசதி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் இருப்பு, பசுமை வீடுகள் திட்ட பயனாளிகள், இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பேசுகையில் தெரிவித்ததாவது, ஊராட்சிகளில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வழிவகை செய்வதற்காகத்தான் கிராம சபை கூட்டங்;கள் நடத்தப்படுகின்றன. அரசின் திட்டங்கள், பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஜனநாயகத்தின் முக்கிய பங்கு கிராமசபை ஆகும்.தூய்மை பாரத திட்டத்தின் சார்பில் சுற்றுபுறத்தை தூய்மையாகவும் சுகாதாரமாக முற்றிலும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்