அதிமுக சார்பில் மே தின விழா பொதுக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 05 02

காஞ்சிபுரம் அடுத்த ஏகனம்பேட்டையில் அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

 நிர்வாகிகள்

கூட்டத்தில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர்கள் மைதிலிதிருநாவுக்கரசு. வி.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டங்களை வகுத்தவர். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அம்மா தான். மே தினம் விழா கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே தகுதி உள்ளது என்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஊரட்சி குழு தலைவர் காஞ்சி பன்னிர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜிவானந்தம், தென்னேரி வரதராஜிலு, அக்ரி நாகராஜ், மானம்மதி ரவிசங்கர், தங்கபஞ்சச்சரம் உட்பட பல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: