Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      தமிழகம்
Pongal-token-2026-01-04

சென்னை, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.248 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் பொங்கல் பண்டிகை இது என்பதால், ரொக்க பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினும் அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

அதன்படி, 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட இருக்கிறது. மேலும் ரூ.3 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.6936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

வரும் 8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். அன்றைய தினம் முதல், வரும் 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்தநிலையில், ரூ.3,000ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் தமிழகம் முழுவதும் நேற்று முதல் தொடங்கி உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து