Idhayam Matrimony

சர்வாதிகாரிகளை கையாள முடிந்தால்.. புதினை சிறைப்பிடிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூசகம்..?

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      உலகம்
Jelensky 2023 06 27

கீவ், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது குறித்து செய்தியாளர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேசுகையில், “இதற்கு நான் எப்படி பதிலளிக்க முடியும்? நான் என்ன சொல்ல முடியும்? இதுபோன்ற சர்வாதிகாரிகளைக் கையாள முடிந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே 2022 முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சர்வாதிகாரிகள் என்று பெயரைக் குறிப்பிடாமல் ஜெலென்ஸ்கி யாரைக் குறிப்பிடுகிறார் என்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது. இருப்பினும், புதினைத் தான் சிறைப்பிடிக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிடுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

வெனிசுவேலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சனிக்கிழமையில் (ஜன. 3) அமெரிக்க படை கைது செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து