முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் நகராட்சியில் 400 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி தொடங்கும் ஆணைகள் அமைச்சர் மணியன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

வேதாரண்யம் நகரம், ஸ்வஸ்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கும் ஆணைகளை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி,.,ப தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

 ஆணைகள்

வீடுகள் கட்டும் பணி தொடங்கும் ஆணைகளை வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்; தெரிவித்ததாவது,மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவையாகும். தமிழ்நாட்டு மக்கள் முன்னேற்றமான நிலையை அடைய என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆராய்ந்து பல நல்ல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

மாணவர்களுக்கு சீருடை வழங்கி சமுதாய ஒற்றுமையையும், ஏற்றத்தாழ்வின்மையையும் நிலைநிறுத்தி வருகிறது. புரட்சித் தலைவர் உருவாக்கிய சத்துணவுத் திட்டம் இன்றைக்கு மதிய உணவுத் திட்டமாக தரம் உயர்த்தப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து பாதுகாப்பை ஏற்படுத்தி தந்துள்ளது இந்த அரசு. வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் அம்மா அவர்களது மகத்தானத் திட்டம். பசுமை வீடுகள் திட்டம், நெசவாளர்களுக்கு தொழில் செய்ய வசதியான அமைப்பில் குடியிருப்புகளும் ஏற்படுத்தி தந்துள்ளது இந்த அரசு.

புரட்சித் தலைவி அம்மா அறிவித்தபடி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தற்போது 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கும் ஆணைகள் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. வேதாரணயம் நகராட்சிக்கு முதலில் 200 வீடுகள் மட்டுமே ஒதுக்கி ஆணையிடப்பட்டிருந்தது. வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் அவர்களிடம் தொடர்பு கொண்டு, 1000 வீடுகளுக்கான ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வேதாரண்யம் நகராட்சியிலிருந்து விளம்பரம் செய்யப்பட்டு தற்போது 400 நபர்களிடமிருந்து பட்டா நகல்கள் பெறப்பட்டு, முதற்கட்டமாக 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 300 சதுர அடி வரை வீடுகளை கட்டிக் கொள்ளலாம். 300 சதுர அடிக்கு குறைவாக வீடுகள் கட்டக் கூடாது. இவ்வீடுகள் கட்டுவதற்கான தொகை பயனாளிகளுக்கு நான்கு தவணைகளாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி தொடங்கியதிலிருந்து ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். வேதாரண்யம் குடிசைகளை இல்லாத நகரம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்." என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செற்பொறியாளர் சுரேஷ், தேத்தாகுடி தொடக்;க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் திரு,கிரிதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளர் யோகேஸ்வரன், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்