முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டம் நீர்வடிபகுதி விவசாயிகளுக்கு நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை கருத்துக்காட்சி

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தல் விருதுநகர் மாவட்ட நீர்வடிபகுதி விவசாயிகளுக்கு நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை மாவட்ட அளவிலான கருத்துக்காட்சி மாவட்ட கலெக்டர் சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத்திட்டம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலான்மை திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் ஒரு விசை தெளிப்பான் ரூ4600 மதிப்பில் 10 பயனாளிகளுக்கு ரூ46000- மதிப்பில் விசைத்தெளிப்பானும், 100சதவிகித மானியத்தில் ஒரு தார்பாய் ரூ7000- மதிப்பில் 50 பயனாளிகளுக்கு ரூ350000 மதிப்பில் தார்ப்பாய்களும் மாவட்ட கலெக்டர் சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:-
 மாவட்ட நீர்வடிபகுதி மேம்பாட்டு முகமை பிரதமமந்திரி விவசாய நீர்பாசனத்திட்டம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின் நோக்கமானது விவசாயிகளுக்கிடையே மழைநீரை சேகரிக்க வேண்டியதின் அவசியம் மற்றும் சேமித்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி வேளாண்தொழில் செய்து கூடுதல் லாபம் அடைந்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்வதாகும்.
 விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத்திட்டம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் மழைநீரை சேமிக்க இயற்கை வள மேம்பாட்டு பணிகளாக ஊரணி அமைத்தல், பண்ணைக்குட்டை, கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள், கிணறுகள், புனரமைப்பு பணி மழைநீர் செறிவூட்டும் அமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சேமித்த நீரை பண்ணை உற்பத்திமுறை திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண்காடுகள் வளர்ப்பு, பழமரக்கன்றுகள் வளர்ப்பு, செயல்விளக்கத்திடல், தேனிவளர்ப்பு, வேளாண் உபகரணங்கள் ஆகியவை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
 விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத்திட்டம் ஐ முதல் ஓஏஐ வரையிலான திட்டங்கள் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 140 நீர்வடிப் பகுதிகளைச் சார்ந்த 153 ஊராட்சி பகுதிகளில் சுமார் 81060 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 விருதுநகர் மாவட்டத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத்திட்டம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் 2016- 17 ம் ஆண்டு 2017 யு மற்று 2017 டீ ம் ஆண்டில் 2017 டீ வரிசையில் ரூ340000- இலட்சத்திலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இயற்கையோடு இசைந்த விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், பெய்யும் மழைநீரை ஒருங்கிணைந்த நீர் வடிவுப்பகுதி மேலாண்மை திட்டத்தின் மூலம் பூமியில் சேமித்து அதை சிக்கனமாக பயன்படுத்தி, கோடைகாலங்களில் எந்த பயிரை விவசாயம் செய்தால் பயன்பெற முடியும் என்பதை அறிந்து பயிர் செய்து விவசாயத்தில் லாபம் ஈட்டி பயன்பெற வேண்டும் என்றார்.
 முன்னதாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வடிவுப்பகுதி மேம்பாட்டு முகமை பிரதமமந்திரி விவசாய நிர்பாசனத்திட்டம் ஒருங்கிணைந்த நீர்வடிவுப்பகுதி மேலாண்மை திட்டத்தின் கருத்து கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
 இக்கருத்து கண்காட்சியில் மேலாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குநர் சக்கரவர்த்தி, மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பால்பாண்டி, வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சத்தியராய், உதவி இயக்குநர் முருகேசன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்