முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 4 மே 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

கூட்டத்தில் தஞ்சாவூர் பெரிய கோவில் கிரிவல பாதையில் சூரிய மின் விளக்குகள் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். கும்பகோணம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் நடைபாதை அமைத்தல் தொடர்பாகவும், கச்சமங்கலம் கிராமப் பகுதியில் அமைந்துள்ள அணையினை பிரதான நகர புனரமைப்பு திட்டத்தின் புனரமைப்பது தொடர்பாகவும், தஞ்சை பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழிகளை மேம்படுத்தவும், கும்பகோணம் நகரில் அமைந்துள்ள முக்கிய கோவில்களுக்கு பக்தர் சுலபமாக சென்று வருவதற்கு கோவில் விளம்பர பலகை அமைத்து, சாலை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சுற்றுலா பணிகள் மேம்படுத்துதல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், சுற்றுலா அலுவலர் ராஜசேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) ரவிமனோகர், திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.கணேசன், மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்