முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை: மாநிலத் தேர்வுக்கு 145 பேர் தகுதி

வெள்ளிக்கிழமை, 5 மே 2017      திருநெல்வேலி

தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர், மாணவிகளுக்கான சேர்க்கையின் மாநிலத் தேர்வுக்கு  நெல்லலை  மாவட்டத்தைச் சேர்ந்த 145 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

23 விளையாட்டு விடுதிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர்நலத் துறையின் கீழ், பள்ளிகளில்பயிலும் மாணவர், மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரியும் வகையில் பயிற்சி, தங்குமிடம்,உணவு வசதியுடன் கல்வி கற்க 23 விளையாட்டு விடுதிகள் உள்ளன. மேலும், 5 விளையாட்டுப் பள்ளிகளும் உள்ளன.

பல மாவட்டங்களில்

மதுரை,திருச்சி,திருநெல்வேலி,கிருஷ்ணகிரி,கோவை,கடலூர்,தஞ்சாவூர்,அரியலூர்,தூத்துக்குடி,சிவகங்கை, தேனி,ராமநாதபுரம்,உதகமண்டலம்,விழுப்புரம், நெய்வேலி,சென்னை,நாமக்கல் ஈரோடு,நாகர்கோவில்,புதுக்கோட்டை,தருமபுரி,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியே விளையாட்டு விடுதிகள் உள்ளன.இந்த விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தகுதித் தேர்வு நடைபெற்றது.

145 பேர் தேர்வு

தடகளம்,இறகுப்பந்து,கூடைப்பந்து,குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை,ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து,ஹாக்கி, நீச்சல்,தேக்வாண்டோ, வாலிபால்,பளுதூக்குதல்,கபடி,மேசைப்பந்து, டென்னிஸ்,ஜூடோ,ஸ்குவாஷ்,வில்வித்தை ஆகிய போட்டிகளில் நடந்த தேர்வில் 145 பேர் வெற்றி பெற்று மாநிலத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த மாநிலத் தேர்வானது,அந்தந்த விடுதிகள் அமைந்த மாவட்டங்களான சென்னை, மதுரை, தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும். இதில், பங்கேற்கும் வகையில் 14 மாணவர், மாணவிகளுக்கும் தேர்வு அட்டைகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்