முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில், தெப்ப திருவிழா: விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

மாநிலங்களவை உறுப்பினர்  அ. விஜயகுமார் சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீதாணுமாலையன் திருக்கோவிலில், தெப்பதிருவிழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 தெப்ப திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், ஸ்ரீதாணுமாலையன் திருகோவிலில், சித்திரை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 27.04.2017 அன்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.  9-ம் திருவிழாவான 05.05.2017 அன்று தேரோட்டம் நடைபெற்றது.  10-ம் திருவிழாவான 06.05.12017 அன்று தெப்ப திருவிழா நடைபெற்றது.  இதையொட்டி, இரவு 8 மணிக்கு கோவிலிருந்து தட்டுவாகனங்களில் மேளதாளம் முழங்க சாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங்காரத்துடன் தெப்பத்தில் எழுந்தருளினர். இந்நிகழ்ச்சியில் , மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்