முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நுண்ணீர் பாசன திட்ட மேளா நடைபெறுகிறது: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

புதன்கிழமை, 10 மே 2017      தர்மபுரி

 

தருமபுரி மாவட்டத்தில் 2017-2018-ம் அண்டில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் ஆகிய திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை

 

தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய வட்டாரங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 15.05.2017ம் தேதியிலும், காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாரங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 16.05.2017 தேதியிலும் நடைபெறும் விண்ணப்ப மேளாவில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான திட்டங்களின் பயன்பெற விண்ணப்பத்தை சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து கொண்டு திட்டங்களில் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன்கார்டு நகல், குஆடீ ஆகிய ஆவணங்கள் இணைக்க வேண்டும் எனவும், மேலும், விண்ணப்ப மேளா காலை 9.45 மணி முதல் 5.45 மணி வரை நடைபெறும் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்