முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய கல்வி கண்காட்சி மதுரையில் 15 - ம் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 11 மே 2017      மதுரை
Image Unavailable

 

மதுரை,  மதுரையில் ரஷ்ய கல்வி கண்காட்சி வரும் 15 - ம் தேதி ராயல் கோர்ட் ஹோட்டலில் நடக்கிறது.
               இது குறித்து ஸ்டடி அப்ராட் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், கசான் ஸ்டேட் ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அக்மெடோவ் தைமூர் ஆகியோர் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
                 மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ராயல் கோர்ட்டில் வரும் 15 - ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரஷ்ய கண்காட்சி நடக்கிறது. இதில் மருத்துவம், பொறியியல் மற்றும் ஏவியேஷன் கல்வியை கற்பிக்கும் 12 ரஷ்ய முன்னணி அரசு கல்வி நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. இந்த கண்காட்சியில் பிளஸ் டூ வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டபடிப்பு சான்றிதழ்களை சமர்பிக்கும் மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளுக்கு சேர்க்கை படிவம் வழங்கப்படும்.
             ரஷ்யாவில் உள்ள பல்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்கள் 500 மருத்துவ சீட்களை தமிழ்நாட்டுக்கு மாணவர்களுக்கு வழங்க உள்ளது. நீட் நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் ரஷ்ய கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களுக்கு மருத்துவ சீட்களை ஒதுக்கி உள்ளது தருகிறது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் பயன்பெற வேண்டும். ரஷ்யாவில் உள்ள 63 அரசு மருத்துவ பல்கலை கழகங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றவை.
            இந்த ரஷ்ய கல்வி கண்காட்சி இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னையில் 18 - வது ஆண்டாகவும், மதுரையில் 2 - வது ஆண்டாகவும் இந்த கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை தென்இந்திய ரஷ்ய கூட்டமைப்பின் துணை தூதரகம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர்க்கைக்கான இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராட் ஆகியவை இணைந்து நடத்துகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்