முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      திருவாரூர்
Image Unavailable

 

திருவாரூர் மாவட்டத்தில் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நேற்று (12.5.2017) திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்டிமேடு

திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் உள்வட்டம் எழிலூர்,சேகல், ஆதிரெங்கம், கட்டிமேடு, பாண்டி, கள்ளிக்குடி, வங்கநகர், மருதவனம், மாங்குடி, ஆரியலூர், எடையூர்ஆகிய பத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டாமாறுதல், நில அளவை, பட்டா, பெயர் மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்பட 76 மனுக்கள் பெறப்பட்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காண அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் திருவாரூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அ.பதிவேடு, அடங்கல், பட்டா படிவம், நன்செய் புன்செய் கழிவு கணக்கு, பயிராய்வு கணக்கு, மரப்பட்டா பதிவேடு, பட்டா மாறுதல் விவரங்கள் உள்பட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு விவரங்கள் ஆய்வு செய்து பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்;தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) 10.05.2017 முதல் 19.05.2017 வரை நடைபெறுகிறது. வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் இந்நிகழ்வில் பொதுமக்கள் மனு ஸ்டாம்பு ஒட்டி கோரிக்கை மனு அளிக்க தேவையில்லை. மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் பெற்று மனு எழுதி வழங்குவது குறித்து புகார் வரப்பெறுவதால் அரசு அலுவலக வளாகங்களில் கோரிக்கை மனுக்கள் எழுதி கொடுத்து அதில் மனுஸ்டாம்பு ஒட்டி அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசு அலுவலகங்களில் மனு எழுதி கொடுப்பது அனுமதி வழங்குவதில்லை. எனவே அரசு அலுவலர்கள் கோரிக்கை மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டுமென அலுவலர்களை மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்;.

பின்னர் முதியோர் ஒருவர் மனுகொடுத்தவுடன் மாவட்ட கலெக்டர் மனுவை ஆய்வு செய்து உடனடியாக அந்த முதியவருக்கு முதியோர் ஓய்வுதியம் வழங்க அதற்க்கான ஆணையை வழங்கினார்.மற்றும் அதேபோன்று வாரிசு சான்றிதழ்க்கான ஆணையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த தீர்வாயத்தில் துணை கலெக்டர் (சுமூக பாதுகாப்புத்திட்டம்) விஜயலெட்சுமி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகோபாலன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாண்டியராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கிருஷ்ணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ரெங்கசாமி, வட்டாட்சியர் உதயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்