முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இயற்கை சீற்ற பகுதியில் வசிக்கிறார்கள்: ராஜ்நாத்சிங்

திங்கட்கிழமை, 15 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  நாட்டில் வசிக்கும் மக்கள் தொகுதியில் பாதிக்கும் மேற்பட்டோர் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பகுதியில் வசிக்கிறார்கள். இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இயற்கை பேரழிவு பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகத்திலேயே இந்தியாவில்  வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர்  இயற்கை சீரழிவு ஏற்படும் பகுதியில் வசிக்கிறார்கள். புயல், சுனாமி, வறட்சி, வெள்ளம், பூகம்பம் ஆகிய இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவதை தடுக்க மாநில அரசுகள் மற்றும் இதர அமைப்புகளுடன் சேர்ந்து மத்திய அரசு திட்டம் வகுத்து செயல்படுகிறது. இதற்காக தேசிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்