முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை தாலுக்காவில் ஜமாபந்தி வருகிற 19ந் தேதி நடக்கிறது: தாசில்தார் ரவி தகவல்

திங்கட்கிழமை, 15 மே 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்பாயம்) வருகிற 19ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் தி.மலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் தலைமையில் தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 29ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை தாசில்தார் ரா.ரவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை வட்டத்தில் வருகிற 19ந் தேதி தொடங்கி 29ந்தேதிவரை ஜமாபந்தி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறவுள்ளது வரும் 19ந் தேதி (வெள்ளிகிழமை) முதல் நாள் நாயுடுமங்கலம் உள்வட்டத்துக்குட்பட்ட மேப்பத்துறை, கீழாத்தூர், நார்த்தாம்பூண்டி நெல்லிமேடு, சி.ஆண்டாப்பட்டு, பெரியகிளாம்பாடி, சிறுகிளாம்பாடி, முத்தரசம்பூண்டி, கார்கோணம், கோவூர், கமலப்புத்தூர், வடபுழுதியூர், மருத்துவாம்பாடி, அகரம் சிப்பந்தி, நாயுடுமங்கலம், பொற்குணம், வெளுகனந்தல், சாலையனூர், ம.ந.பாளையம், தேவனாம்பட்டு, ஊதிரம்பூண்டி, காட்டுபுத்தூர்,

கணந்தம்பூண்டி

2ம் நாள் 29ந் தேதி (திங்கட்கிழமை) திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்திற்குட்பட்ட தி.மலை, கீழ்நாத்தூர், ஆடையூர், வேங்கிக்கால், சின்னகாங்கியனூர், நல்லான்பிள்ளைபெற்றாள், பள்ளிகொண்டாப்பட்டு, சம்பந்தனூர், நொச்சிமலை, சோ.கீழ்நாச்சிப்பட்டு, வாணியந்தாங்கல், மலப்பாம்பாடி, சு.பள்ளியம்பட்டு, சாவல்பூண்டி, கீழ்அணைக்கரை, மேலத்திக்கான், அடிஅண்ணாமலை, கோசாலை, தேவனந்தல், அய்யம்பாளையம், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான், காவேயாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தம்பூண்டி,

3ம் நாள் 23ந் தேதி (செவ்வாய்கிழமை) துரிஞ்சாபுரம் மற்றும் தச்சம்பட்டு உள்வட்டங்களுக்குட்பட்ட துரிஞ்சாபுரம், மல்லவாடி, ஊசாம்பாடி, சொரந்தை, களஸ்தம்பாடி, சடையனோடை, சானானந்தல், முனியந்தல், இனாம்காரியந்தல், வெங்காயவேலூர், சொரகொளத்தூர், வடகருங்காலிபாடி, மாதலம்பாடி, வடகரிம்பலூர், கூத்தலவாடி, கருந்துவாம்பாடி, கொளக்கரவாடி, பிச்சனந்தல், சீலபந்தல், இனாம்வெளுகனந்தல், காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, சின்னகல்லப்பாடி,

4ம் நாள் 24ந் தேதி (புதன்கிழமை) தச்சம்பட்டு உள்வட்டத்துக்குட்பட்ட தலையாம்பள்ளம் 1, தலையாம்பள்ளம் 2, சக்கரதாமடை, நரியாப்பட்டு, பறையம்பட்டு, பழையனூர், கல்லொட்டு, அத்திப்பாடி, கண்டியாங்குப்பம், வேளையாம்பாக்கம், தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு

5ம் நாள் 25ந் தேதி (வியாழக்கிழமை) தச்சம்பட்டு மற்றும் மங்கலம் உள்வட்டங்களுக்குட்பட்ட நவம்பட்டு, பெரியகல்லப்பாடி, பெருமணம், தேவனூர், ஆருத்திராப்பட்டு, பனையூர், வள்ளிவாகை, தெள்ளானந்தல், குன்னியந்தல், துர்க்கைநம்மியந்தல், கிளியாப்பட்டு, வடஆண்டாப்பட்டு, குண்ணுமுறிஞ்சி, ஆர்ப்பாக்கம், நூக்காம்பாடி, வி.நம்மியந்தல், ராந்தம், மங்கலம், பாலானந்தல்

6ம் நாள் 26ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை தெற்கு உள்வட்டத்துக்குட்பட்ட சமுத்திரம், நல்லவன்பாளையம், அரடாப்பட்டு, சு.பாப்ப்பாடி, கீழ்சச்சிராப்பட்டு, மேல்புத்தியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, தென்மாத்தூர், உடையானந்தல்,, மேல்செட்டிப்பட்டு, விஸ்வந்தாங்கல், மஞ்சம்பூண்டி, கீழ்செட்டிப்பட்டு, அரசுடையாம்பட்டு, கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல்

7ம் நாள் 29ந் தேதி (திங்கட்கிழமை) திருவண்ணாமலை தெற்கு மற்றும் வெறையூர் உள்வட்டங்களுக்கு பவித்திரம், அப்புப்பட்டு, மெய்யூர், நாச்சானந்தல், மேல்கச்சிராப்பட்டு, வெறையூர், திருவாணைமுகம், திருக்காளூர் வாளாவெட்டி, திருவரங்கம் வாளவெட்டி, சு.நல்லூர், விருதுவிளங்கினான், காடகமான், பொரிக்கல், சு.வாளவெட்டி, கல்லேரி, சு.நாயர்பட்டு,

ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக எழுதி ஜமாபந்தி நடைபெறும் நாளில் ஜமாபந்தி அலுவலரிடம் சமர்ப்பித்து தீர்வு காணலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்