அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தை கொடுக்கும் : திருவொற்றியூரில் தமிழருவி மணியன் பேச்சு

திங்கட்கிழமை, 15 மே 2017      சென்னை
Thiruvettriur 2017 05 15

அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும் மேலும் பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே பெற முடியும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திருவொற்றியூர் இலக்கிய கூட்டத்தில் பேசினார்.

 திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட சிந்தனைச்சாரல் நிகழ்ச்சி திருவொற்றியூர் சங்கரவித்யாகேந்திர மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாசகர் வட்டத்தலைவர் என்.துரைராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் நூலகர் பானிக்பாண்டியன் வரவேற்றார். கௌரவத்தலைவர் ஜி.வரதராஜன் வாழ்த்துரை வழங்கினார். துணைத்தலைவர் கே.சுப்பிரமணி, பள்ளிதளாளர் ஜெ.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் வாழ்க்கையெனும் ஜீவரசம்என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது, வாழ்க்கை என்பது பொதுவாகத் துன்பம் அதிகம் நிரம்பியதுதான். ஆனால் இன்பம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டுமே தவிர துன்பத்தை எண்ணியே வருத்தமடைய முடியாது. பசி, நோய், பகை இல்லாத வாழ்க்கையில் அறம் சிறக்கும்.

எந்த விலங்கும், பறவையும் கால சூழலுக்கு ஏற்ப தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளவில்லை. காரணம் அவற்றிற்கு மனிதனை போல் சிந்தனை அறிவு கிடையாது. எனவே இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டு அறநூல்களில் கூறப்பட்டுள்ளவைகளை கடைபிடித்து ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை அமைத்து கொண்டால் அதுவே ஜீவரசமாக சுவையோடு இருக்கும். இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

கூட்டத்தில் நகர பிரமுகர்கள் எம்.காமாட்சி, எஸ்.நளராஜன், இராதாகிருஷ்ணன், குமரய்யா, சத்தியமூர்த்தி உட்பட ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மதியழகன் நன்றி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: