விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      விழுப்புரம்
vpm collector 2017 05 16

விழுப்புரம் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்தில் எவ்வித சிரமமும் இன்றி அனைத்து வழித்தடங்களிலும் அரசு பேருந்துகளை இயக்கப்படுவதை, விழுப்புரம், திண்டிவனம் அரசு பேருந்து பணிமனைகள் மற்றும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கலெக்டர்இல.சுப்பிரமணியன்  ஆய்வு செய்தார்.

 துரித நடவடிக்கை


 விழுப்புரம் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிரமங்களை சீர்செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் அதிகாலையில் விழுப்புரம் அரசு பேருந்து பணிமனை-1, 2 ரூ 3 மற்றும் திண்டிவனம் அரசு பேருந்து பணிமனை ஆகிய இடங்களுக்குச் சென்று பணிமனை மேலாளரிடம் அதிகாலையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையையும், பேருந்துகள் இயக்கப்பட்ட விவரங்களையும் கேட்டறிந்து, அனைத்து பேருந்துகளையும் இயக்க மாற்று ஏற்பாடாக, போக்குவரத்துத்துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் தகுதியான, அனுபவமிக்க தனியார் பேருந்து ஓட்டுநர்களை பயன்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் பேருந்து இயக்கம் கண்காணிக்கப்படுவதையும், பேருந்து நிலையங்களிலிருந்து அனைத்து வழித்தடங்களுக்கும் பேருந்து செல்வதற்கும், பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இன்றி பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்கு காவல்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை கலெக்டர்இல.சுப்பிரமணியன்  பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,இ.கா.ப., போக்குவரத்துத்துறை பொது மேலாளர் நடராஜ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாவேந்தன், விழுப்புரம் வட்டாட்சியர் பத்மா, பணிமனை மேலாளர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: