முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியாவிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட டிரம்பிற்கு கடும் எதிர்ப்பு

புதன்கிழமை, 17 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் விமானப் பாதுகாப்பு பற்றிய முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது முற்றிலும் சரிஎன்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனது பரம எதிரியான ரஷ்யாவுடன் அதிபர் டிரம்ப் நெருக்கமாக இருந்து வருகிறார். அமெரிக்கா குறித்த பாதுகாப்பு தகவல்களை ரஷ்யாவுடன் பகிர்ந்து வருகிறார். இதற்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பயங்கரவாதம் மற்றும் விமான சேவை தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் ஐ.எஸ்., மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்பை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோபை சந்தித்தார். அப்போது லவ்ரோபையுடன் விமானங்களில் மடிக்கணினியின் உபயோகம் மற்றும் ஐ.எஸ் அமைப்பினரின் திட்டத்தை வெளிப்படுத்தும் அதீத ரகசிய தகவல்களை டிரம்ப் பகிர்ந்துள்ளதாக `வாஷிங்டன் போஸ்ட்` தெரிவித்துள்ளது.

தனது பங்குதாரர் இஸ்ரேலிடம் இருந்து பெற்ற ரகசிய தகவல்களை, அனுமதி பெறாமல் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் எந்த தகவல்களையும் பகிர்ந்துகொள்ள தனக்கு அதிகாரம் இருப்பதால் இது சட்டவிரோதமல்ல என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த செயலுக்கு அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மேலும் டிரம்ப் கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்களும்,ரஷ்யாவுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டதற்கு டிரம்பிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த விமானம் ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் லேப்டாப்பில் வெடிகுண்டை மறைத்து கொண்டுவந்த அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் இதை இஸ்ரேல் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் முன்கூட்டியே தெரிந்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்ததால் பெரும் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையும் ரஷ்யாவிடம் டிரம்ப் கூறியதாக தெரிகிறது. இதனால் இந்த தகவலை கூறிய அந்த இஸ்ரேல் உளவாளிக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஐரோப்பா நாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் லேப்டாப் எடுத்துவர அதிபர் டிரம்ப் தடைவிதிப்பது குறித்து பரிசீலனை செய்துகொண்டியிருப்பதாகவும் தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்