தருமபுரி மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி: கலெக்டர் கலெக்டர் கே.விவேகானந்தன் ஏற்றுக்கொண்டனர்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தர்மபுரி
1

 

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை கலெக்டர் கலெக்டர்கே.விவேகானந்தன், தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று (19.05.2017) ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழி


 

அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம், எல்ல மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் பொற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும், ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலெக்டர் அ. சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலெக்டர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கலெக்டர் இரா. சண்முகசுந்தரம், தனித்துணை கலெக்டர் கலெக்டர் குப்புசாமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கலெக்டர் இலாஹிஜான் மற்றும் துறை ரீதியான அலுவலர்கள் பலர் உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: