வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் சார்பாக தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      சென்னை

சென்னை, கொளத்தூரில் உள்ள சென்னை வடக்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் அண்ணாநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், சென்னை வடமேற்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்குட்பட்ட 27 தனியார்பள்ளிகளை சேர்ந்த பேருந்துகளை வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் கொளத்தூர் அருகே 179 பேருந்துகளை ஆய்வு செய்தனர்.

தனியார் பேருந்து

இதில் 4 பேருந்துகள் தகுதியில்லை என நிராகரிக்கப்பட்டன. இந்த ஆய்வில் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஸ்ரீதர் , சென்னை வடக்கு வட்டாரப்போக்குவரத்து அதிகாரி அசோக்குமார், சென்னை வடமேற்கு போக்குவரத்து வட்டார அதிகாரி செந்தில்வேலன், மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி , செந்தூர்வேலன், செழியன், ராஜாமணி மற்றும் வருவாய்துறையினர், பள்ளி கல்வி துறையினர் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்: