'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' படம் குறித்து பிரதமர் மோடியுடன் சந்தித்து சச்சின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      விளையாட்டு
Modi Sachin(N)

புதுடெல்லி, சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்து பேசினார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ பெயரில் திரைப்படமாக வருகின்ற மே 26-ம் தேதி வெளிவர உள்ளது. சச்சின் வாழ்க்கை படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். புகழ்பெற்ற இந்தியர்களான சச்சின் மற்றும் ரகுமான் இணைந்துள்ள இப்படம் உலகம் முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மோடியுடன் சந்திப்பு

சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சச்சின் டெண்டுல்கர் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் குறித்து மோடியிடம் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது சச்சின் ஏ பில்லியன் ட்ரிம்ஸ் குறித்து அவர் பேசியதாக தெரிகிறது. மோடியுடனான சந்திப்பு குறித்து 2 போட்டோக்களை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சச்சின் ஏ பில்லியன் ட்ரிம்ஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கியதாகவும் அவரின் ஆசிர்வாதங்களை பெற்றதகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு டிவிட்டரில் உங்களின் ஊக்கமளிக்கும் செய்திகளுக்கு நன்றி என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

மோடி ட்விட்

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சச்சின் உடன் ஒரு நல்ல சந்திப்பு இருந்தது. அவரது வாழ்க்கை பயணம் மற்றும் சாதனைகள் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைகொள்ள செய்கிறது. 1.25 பில்லியன் மக்களுக்கும் ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: