எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள்: புதுவையில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      புதுச்சேரி

புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. இது குறித்து புதுவை கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

 உயர்ந்த தேர்ச்சி விகிதம்

புதுவை மாநிலத்தில் பள்ளிகள் மூலம் 17495 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 8863 பேர், மாணவிகள் 8632 பேர், இவர்களில் 16388 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.67 சதவீத தேர்ச்சியாகும். இது கடந்த ஆண்டை விட 1.25 சதவீதம் அதிகமாகும். இதில் மாணவிகள் 8278 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.90 ஆகும். மாணவர்கள் 8110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.05 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 4.40 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள் அபாரம்

அரசு பள்ளிகளில் பயின்று 6734 பேர் தேர்வு எழுதினர். இதில் 5866 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.11 சதவீதம் ஆகும். தனியார் பள்ளிகளில் 10761 பேர் தேர்வு எழுதினர். இதில் 10522 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.78 சதவீதமாகும். புதுவை பகுதியில் 94.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.87 சதவீதம் அதிகமாகும். காரைக்கால் பகுதியில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 3.24 சதவீதம் அதிகமாகும். புதுவை பகுதியில் அரசு பள்ளிகள் 88.07 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.13 சதவீதம் அதிகம். இதே போல காரைக்காலில் அரசு பள்ளிகள் 83.32 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.11 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: