முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க மழை பரிசுத்திட்டத்தில் தேர்வு பெற்ற 11 நபர்களுக்கு தங்க காசுகள்: அமைச்சர்கள் பி.தங்கமணி,வி.சரோஜா ஓ.எஸ்.மணியன் வழங்கினர்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையம் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு அதன் திறப்புவிழா நேற்று (21.05.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்;கு கலெக்டர் மு.ஆசியா மரியம்   தலைமை வகித்தார்.

கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை

இவ்விழாவிற்கு சென்னை கோ-ஆப்-டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் ந.வெங்கடேஷ், , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி , சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டு நவீன மயமாக்கப்பட்ட கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்தனர்.

பின்னர் இது குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது,

இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக விளங்கி வருகின்ற கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனம் கடந்த 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 82 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவையினை ஆற்றிவருகின்றது. இந்தியா முழுவதும் ஏறத்தாள 195 கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்கி உற்பத்தி செய்யும் துணி ரகங்களை விற்பனை செய்தும் வருகின்றது.

வாடிக்கையாளர்களின் பேராதரவினால் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.315 கோடி மதிப்பீட்டில் கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு துணி ரகங்கள், கோ-ஆப்-டெக்ஸ் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் இவ்விற்பனையை மேலும் அதிகரித்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைத்தறி துறையில் மானிய கோரிக்கையில் கைத்தறி துறை அமைச்சர் நாமக்கல் நகரம் சேலம் ரோடு பலப்பட்டறை மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையம் நவீன மயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையம் நவீன மயமாக்கப்பட்டு அமைச்சர் பெருமக்களால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்-டெக்சின் 2016-17 தங்க மழை திட்டத்தின் கீழ் சேலம் மண்டத்தில் வெற்றிப்பெற்ற வாடிக்கையாளர்களுக்கு முதல்பரிசாக 8கிராம் தங்கம் 4 வாடிக்கையாளர்களுக்கும், இரண்டாம்பரிசாக 4கிராம் தங்கம் வீதம் 9 வாடிக்கையாளர்களுக்கும் என தங்க மழை பரிசுத்திட்டத்தில் வெற்றிப்பெற்ற மொத்தம் 11 வாடிக்கையாளர்களுக்கு தங்க காசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

நவீன மயமாக்கப்பட்ட புதிய விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு புதுவரவாக எண்ணற்ற வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், சேலம் பட்டுப்புடவைகள், மின்பட்டுப்புடவைகள், முகூர்த்த பட்டுப்புடவைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், சிறுமுகை காட்டன் சேலைகள், குருதீஸ், லினன் ஃ காட்டன் சட்டைகள், குல்டு, மெத்தை விரிப்புகள், ஏற்றுமதி துண்டுகள் மற்றும் பிரிண்ட் போர்வைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரகங்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு நாமக்கல் கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.111.32 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு (2017-18) ரூ.2.00 கோடி விற்பனை இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

நெசவாளர்களின் வாழ்க்கைத்தரத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திடும் வகையில் கோ-ஆப்-டெக்ஸ் விற்பனை நிலையம் நெசவாளர்களின் உற்பத்தி பொருட்களை தொடர்ந்து சந்தைப்படுத்தி கொண்டிருக்கின்றது. மக்கள் அதிக அளவில் கோ-ஆப்-டெக்ஸ் பொருட்களை வாங்கி பயன்படுத்த முன்வரவேண்டும் இதனால் தைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு அவர்களின் பொருளாதாரமும் மேம்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவகையில் வண்ணங்களை மாற்றியமைத்து மக்களின் ரசனைக்கு ஏற்ப்ப உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் மாணவ மாணவியர்கள் அனைவரும் கோ-ஆப்-டெக்ஸ் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். தைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு உதவிடவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

முன்னதாக, கோ-ஆப்-டெக்சின் 2016-17 தங்க மழை பரிசுத்திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற தர்மபுரி மாவட்டம், வடமலைப்பட்டியைச் சேர்ந்த வி.சரவணன், கிருஷ்ணகிரி மாவட்டம், குருப்பரபள்ளியைச் சேர்ந்த எம்.பிரியதர்ஷிணி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.ஜி.கே.ஆர்த்தி மற்றும் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த எம்.மகேஸ்வரி ஆகியோருக்கு முதல்பரிசாக 8கிராம் தங்க நாணயங்களையும், எஸ்.சகாயம், ப.தீபலட்சுமி, எஸ்.செந்தில்குமரன், கயல்விழி, சாமிநாதன், பிரசாத், உமாமகேஸ்வரி உள்ளிட்ட 7 நபர்களுக்கு இரண்டாம் பரிசாக 4கிராம் தங்க நாணயங்களையும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி , சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வழங்கினர்.

இவ்விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அன்பழகன், அரசு வழக்கறிஞர் தனசேகரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ம.இராஜசேகரன், கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனத்தலைவர் கே.வி.மனோகரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆர்.பூபதி, சி.கலைவாணி, எம்.தங்கவேல், நாமக்கல் - சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, டி.சி.எம்.எஸ்.தலைவர் பி.என்.கந்தசாமி உட்பட கூட்டுறவாளர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், கோ-ஆப்-டெக்ஸ் நிறுவன பணியாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்