சாலை விபத்தில் காயமடைந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகி: கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      கடலூர்
pandiyan mla

சாலை விபத்தில் காயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகியுமான ஆரோகிய அந்தோனி ஜஸ்டினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் கூறி தேவையான சிகிச்சைகளை அளித்திடுமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாஸ்கரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

 பலர் பங்கேற்பு

உடன் சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய கழக அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், பேரூர் கழக செயலாளர் முத்தையன், மணிகண்டன்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், சச்சிதானந்தம், உதவி மருத்துவமணை கண்காணிப்பாளர் செல்வமுத்துக்குமரன், மருத்துவர் சிவா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: