முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கூடுதல் வகுப்புகள் நடத்தும் திட்டம் - கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

திங்கட்கிழமை, 22 மே 2017      தமிழகம்
Image Unavailable

ஈரோடு : பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேரங்களில், வாரத்திற்கு 3 நாட்கள் கூடுதல் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இவ்வகுப்புகளில் பங்கேற்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமைத் தொடக்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் மே மாதம் முதல் டிசம்பர் வரை நடக்கவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் மாதம் வரை நடக்கவுள்ள 216 சிறப்பு முகாம்கள் மூலம் 2.16 லட்சம் கால்நடைகள் பயன்பெறும். இம்முகாம்களுக்கு என ரூ.9.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் 20 லட்சம் மாணவர்களுக்கு, குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

சீருடையில் மாற்றம்

மாணவ. மாணவியர்களுக்கு எந்தவொரு இடர்பாடுகள் வந்தாலும் 24 மணிநேரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக அதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை மாவட்டத்தில் மாற்றம் செய்ய இதற்கு மூன்று ஆண்டுகாலம் பிடிக்கும்.

ஸ்மார்ட் கார்டு

அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் புகைப்படம், பெயர், தாய் தந்தையர் பெயர், பிறந்த தேதி, முகவரி, கைபேசி மற்றும் தொலைபேசி எண்கள், ரத்த வகைப்பாடு, குடும்ப அட்டை எண், ஆதார் அட்டை எண் இவை அனைத்தும் பதியப்பட்டு வழங்கப்படும்.

பொதுத்தேர்வு எழுத பயிற்சி

மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு எழுத பயிற்சி அளிப்பதற்கென சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறவுள்ளது. 32 மாவட்ட தலைநகரங்களில் இந்திய ஆட்சிப்பணிக்கென பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகளுக்கு ரூ.2.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் இந்திய ஆட்சிப்பணிக்கென படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்றார்போல் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 நாட்கள் கூடுதல் வகுப்புகள்

பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரங்களில் கூடுதலாக வாரத்திற்கு 3 நாட்கள் கூடுதல் வகுப்புகள் உருவாக்க உள்ளோம். விருப்பமுள்ள மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் மத்திய அரசு ஏற்படுத்துகின்ற எந்தவொரு தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவியர்கள் திறன்பட உள்ளனர் என்ற நிலையை உருவாக்கும் வகையில் இந்த திட்டங்கள் செய்யப்படவுள்ளது, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்