முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அம்மா உணவகம் மாதிரி நாடு முழுவதும் பரவி வருகிறது: உ.பி.யிலும் ரூ.5-க்கு உணவு

திங்கட்கிழமை, 22 மே 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, தமிழகத்தில் அம்மா உணவகம் மாதிரி நாடு முழுவதும் பரவி வரத்தொடங்கியுள்ளது. தற்போது உத்தரப்பிரதேச மாநில முழுவதிலும் ரூ.5-க்கு உணவு வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஏழை-எளிய மக்கள் மீது பரிவுகொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது குறைந்த விலையில் தரமான முறையில் அம்மா உணவகங்களை தமிழகம் முழுவதும் தொடங்கி சாதனை படைத்தார். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா அரசும் மலிவு விலை உணவு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதனையடுத்து தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் குறைந்த விலையில் அதாவது ரூ.5-க்கு ஒருவேளை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டுவருவது குறித்து முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்