முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலித் வீட்டில் ஓட்டல் உணவை உண்ட சர்ச்சை: மாநில பாஜக தலைவர் எடியூரப்பா விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரூ : கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா சாதியப் பாகுபாட்டைக் கடைப்பிடிக்கும் வகையில், ஓட்டலில் இட்லி வாங்கி வந்து தலித் வீட்டில் சாப்பிட்டார் என்ற சர்ச்சை உருவாகியுள்ள நிலையில் அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் பாகல்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, "மாநிலத்தில் கடுமையான வறட்சி பாதித்துள்ளது. அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்காத முதல்வர் சித்தராமைய்யா என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்.

குறிப்பிட்ட அளவிலேயே உணவு 

நான் சென்றிருந்த வீட்டில் குறிப்பிட்ட அளவிலேயே உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே அங்கு ஓட்டல் உணவு வாங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில் மாநில பாஜக திங்கள்கிழமை இரண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டது. அதில் துமக்குரு, சித்ரதுர்கா ஆகிய இரண்டு இடங்களிலுமே எடியூரப்பாவுக்கு விருந்து அளித்த தலித்துகளே எடியூரப்பா தங்கள் வீட்டில் உணவு அருந்தியதாகக் கூறியுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.

சர்ச்சை என்ன?

கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா சில தினங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி களைப் பார்வையிட்டு வருகிறார்.  துமக்கூரு மாவட்டம் குப்பியில் தலித் வகுப்பைச் சேர்ந்த ருத்ரமுனி வீட்டில் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உள்ளிட்ட பாஜக தலைவர்கள் காலை உணவு சாப்பிடுவதற்காகச் சென்றனர்.  ருத்ரமுனி குடும்பத்தினர் தயாரித்த உணவை சாப்பிடாமல், அருகில் உள்ள உயர்தர சைவ உணவகத்தில் வாங்கி வரப்பட்ட இட்லி, வடையை எடியூரப்பா உள்ளிட்டோர் சாப்பிட்டுள்ளனர்.

ருத்ரமுனி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

அந்த வீட்டில் இருந்த பொருட் களைப் பயன்படுத்தாமல் வாழை இலைகளையும், தண்ணீர் பாட்டீல் களையும் பயன்படுத்தியுள்ளனர். வீட்டில் வாசனை திரவியங்களும் தெளிக்கப்பட்டுள்ளன. ருத்ரமுனி கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ''கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் இருந்தபோதும் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் எங்கள் குடும்பத்தை சாதி ரீதியாக அவமானப்படுத்திவிட்டனர்.

நாங்கள் சமைத்த உணவைச் சாப்பிடாமல், சாதியப் பாகுபாட்டை கடைப்பிடித்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சாதி எண்ணம் நிறைந்த எடியூரப்பா எங்கள் வீட்டுக்கு வராமலே இருந்திருக்கலாம்''என சோகத்துடன் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago