பாரிமுனையில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      சென்னை

 

சென்னை, அம்பத்தூர் காமாராஜர் நகரில் சுரேஷ், வ/26, த/பெ.வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார்.

இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆகும். சுரேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று பீச் இரயில்வே ஸ்டேசனுக்கு தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அங்கு உறவினரை சந்தித்து விட்டு பின்பு ராஜாஜி சாலை. ஜீசஸ் கால்ஸ் பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் மேற்படி சுரேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வடக்கு கடற்கரை போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சரண்ராஜ், வ/29, பி, ஜி.எச் குடியிருப்பு பிளாட்பார்ம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சரண்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து