யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா? திருநாவுக்கரசர் கேள்வி

சனிக்கிழமை, 27 மே 2017      அரசியல்
thirunavukkarasar 2016 09 20

சென்னை, இறைச்சிக்காக மாடுகள் வெட்ட மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா? என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தையொட்டி சத்திய மூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் நேரு. இந்த நாளில் நாடு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. தற்போது மத்தியில் ஆளும் அரசு மக்கள் நலனை செயல்படுத்தாத அரசாகவும், பிரச்சினைகளை கண்டு கொள்ளாத அரசாகவும் உள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மோடி இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு தடை விதித்துள்ளார். இதுவா இப்போது முக்கியம். யார் என்ன சாப்பிட வேண்டும். எப்போது சாப்பிட வேண்டும். எதை சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் மோடியும் அமித்ஷாவுமா முடிவு செய்வது? என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. வரும் 2 ஆண்டுகளில் மொத்த செல்வாக்கையும் இழந்து விடும். அதன் பிறகு ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க., பாரதிய ஜனதாவின் பிடியில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கட்சியை உடைக்கப் பார்த்தார்கள். இப்போது உடைந்த கட்சியை ஒன்று சேர்த்து காலூன்ற பார்க்கிறார்கள். எக்காரணத்தை கொண்டும் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது. பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால் முக்கிய பிரச்சினைகளிலும் அ.தி.மு.க.வால் எதிர்த்து குரல் கொடுக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து