Idhayam Matrimony

வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025      இந்தியா
stalin 2025-01-06

திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் நேற்று மாலை 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்ட ங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர். 12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொண்டனர். மகளிர் அணியினர் பலர் நேற்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.

மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். அங்கு, முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாட்டில் உங்களை சந்திக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து