எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்வது, மாற்றுப் பாதைக்குத் திருப்பி விடுதல் போன்றவை நிகழ்ந்து வருகின்றது. அதன்படி, நேற்று காலை முதல் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் குறைந்தது 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 8 விமானங்கள் மாற்றுப் பாதைக்குத் திருப்பி விடப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
கடும் பனிமூட்டம் காரணமாகப் புறப்படவேண்டிய 64 விமானங்களும், வருகை தரவேண்டிய 64 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக டெல்லி விமான நிலையத்தின் எக்ஸ் பதிவில், பனிமூட்டம் காரணமாக காட்சித்திறன் குறைந்திருந்தது. தற்போது அது மேம்பட்டு வருவதாகவும், இருப்பினும் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
விமானங்களைக் கண்காணிக்கும் இணையதளமான Flightradar24.com-இல் உள்ள தகவலின்படி, கிட்டத்தட்ட 200 விமானங்கள் தாமதமாகியுள்ளன. ஒவ்வொரு விமானமும் புறப்படும் நேரத்தில் 24 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல விமான நிலையங்களில் பனிமூட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் காட்சித்திறன் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக விமானப் போக்குவரத்து இயல்பை விடத் தாமதங்கள் ஏற்படுவதாக இண்டிகோ நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


