முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரி சீர்த்திருத்த தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 27 மே 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சிரக அலுவலக கூட்டரங்கில் வணிகவரித்துறையின் மூலம் தொழில் முனைவோர்களுக்கான (புளுவு) வரிச்சீர்த்திருத்தம் தொடர்பான நடைமுறைகளை கையாளுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   முன்னிலையில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  அமைச்சர்  பேசுகையில்.

உரிய நடவடிக்கை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு யார் எந்த கோரிக்கையினை முன் வைத்தாலும் அதை உடனுக்குடன் பரிசீலனை செய்து நமது முதலமைச்சர்  உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வரிசீர்திருத்தம் குறித்து  அம்மா  இருந்த காலத்திலியே உரிய கண்டனங்களை தெரிவித்த தொழில் முனைவோர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வண்ணம் வரிசீர்திருத்தம் முறையினை வடிவமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்கள். அதேபோல் தான் இன்றும்  அம்மா அவர்களின் வழியில் நடைபெற்று வரும் அரசு தொழில் முனைவோர்களுக்கு உறுதுணையாக இருந்திடும் வகையில் முதலமைச்சர்  முனைப்புடன் கவனித்து வருகிறார்கள். அதன்படி இன்று அனைத்து தொழில் முனைவோர்களை நேரில் வரவழைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்பொழுது 53 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளீர்கள். இதன் மூலம் வரிசீர்த்திருத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேரடியாக வணிக வரித்துறை அலுவலர்கள் முன்னிலையிலையே கேட்டறியப்பட்டுள்ளது.

சிறு குறு தொழில்

தற்பொழுது இச்சீர்திருத்தம் விரைவில் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதால் அதற்கேற்ப தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மாற வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் கணினி மயமாக்கப்பட்ட வரி நிர்வாகத்தால் செயல்படுத்த முடியும் நிலை உள்ளது. அதற்கேற்ப தொழில் முனைவோர் மாறுகின்ற வகையில் வணிக வரித்துறை அலுவலர் உரிய பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவரங்கள் தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து தகவல்கள் கேட்டறியப்பட்டுள்ளது.  நிதியமைச்சர்  இரண்டு முறை இத்திட்டம் குறித்த நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பான கருத்தினை முன் வைத்துள்ளார்கள்.   புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில்  தமிழ்நாடு முதலமைச்சர்   பாரத பிரதமர் அவர்களிடம் வரிசீர்திருத்தம் தொடர்பாக தொழில் முனைவோர் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ள கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.

ஜூன் 1-ம் தேதி

அதுமட்டுமின்றி கோயம்புத்தூர் மாவட்டம் தொழில் நகரமாகும், கோயம்புத்தூர் மாவட்டம் முழுமையான வளர்ச்சி பெற முழுக்காரணம்  புரட்சித்தலைவி அம்மா  மட்டுமேதான். இதுமட்டுமின்றி எந்த மாநிலத்திலுமே செயல்படுத்தாத நிலையில் முதன்முதலாக தொழில் முனைவோர்க்கு தான் தமிழகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை நடைமுறை படுத்தியவர்  அம்மா தான். அதற்கு பிறகுதான் மற்ற மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு திட்டத்தையும் தமிழகத்தில்  அம்மா  அறிமுகப்படுத்திய மூலம் தமிழகத்தில் அதிகளவிலான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் துவக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் வேறெங்கும் செல்வதில்லை அந்த அளவிற்கு அனைத்து அடிப்படை தேவைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்பொழுது உங்களிடம் பெறபட்ட கருத்துகள் அரசுக்குஎடுத்து செல்வது மட்டுமின்றி வருகின்ற ஜீன் 1 தேதி அன்று  நிதியமைச்சர் அவர்களை சந்தித்து உங்கள் அனைவரையின் கருத்துகளை நீங்களே தெரிவிக்கும் வகையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதேபோல் ஜீன் 2 தேதி அன்று  முதலமைச்சர் அவர்களிடம் உங்கள் கருத்துகளை நீங்களே தெரிவிக்கும் வகையில்  அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கருத்துகள் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு  முதலமைச்சர்  மற்றும்  நிதியமைச்சர்  நேரடியாக  பாரத பிரதமர் அவர்களிடம் எடுத்துரைத்து ஓர் நல்ல முடிவை எடுத்திடும் வகையில்  செயல்படுவார்கள் எனவே  அம்மா அவர்களின் வழியில்  தமிழ்நாடு முதலமைச்சர்  தொழில் முனைவோர்க்கு உறுதுணையாகவே இருப்பார் இதுமட்டுமின்றி தொழில் முனைவோர்களுக்கு இப்பகுதியில் என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் தெரிவிக்கலாம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதுமட்டுமின்றி வரும் நிதியாண்டில் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் துவக்க முயற்சியக்கப்படும் என சந்தோசமான செய்தினையும் இதன் மூலம் தெரிவிக்கப்படும் என   நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன்  , வணிக வரித்துறை இணை ஆணையர்கள் அனிஷ்சேகர்  ,  ரஷ்மிசித்தார்த்ஜகடே  , மத்திய சுங்கம், மற்றும் கலால் சேவை வரித்துறை துணை ஆணையர் ராம்குமார் இ.வ.ப மற்றும் தொழில்முனைவோர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து