முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 27 மே 2017      கன்னியாகுமரி

மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ்,  மூன்று மீனவர்களின் குடும்பத்தினருக்கு   நிவாரணத்தொகையாக ரூ.5 இலட்சத்திற்கான காசோலைகளை  கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார்.

மீனவர்கள் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  தலைமையில், ஒவ்வொரு மாதமும், மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.  இக்கூட்டத்தில், மீனவ மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரண தொகை

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம், ஏழுதேசம் சின்னதுறையை சார்ந்த சம்மிக்கேல் என்பவரின் மகன் தேவதாசன் என்பவர்  28.03.2014 அன்று வள்ளத்தினுள் விழுந்து மரணமடைந்தார். அன்னாரது மனைவி . மீனா என்பவரிடம் ரூ. ஒரு இலட்சத்திற்கான காசோலையினையும், கோடிமுனையை சார்ந்த  ஜேசுரெத்தினம் என்பவரின் மகன் மார்சல் என்பவர் 13.03.2015 அன்று இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு, மரணமடைந்தார். அன்னாரது மனைவி . ஆட்லின் என்பவரிடம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், தூத்தூர் என்ற இடத்தை சார்ந்த  மெல்கியாஸ் என்பவரின் மகன் ஜிம்மி என்பவர், 08.01.2016 அன்று பேரூந்து விபத்து ஏற்பட்டு, மரணமடைந்தார். அன்னாரது மனைவி . சைனி என்பவரிடம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகள் என மொத்தம் மூன்று மீனவர்களின் குடும்பத்தினருக்கு, மீனவர் குழு விபத்து காப்புறுதித்திட்டத்தின் கீழ், ரூ.5 இலட்சத்திற்கான காசோலைகளை, கலெக்டர்                சஜ்ஜன்சிங் ரா.சவான்    கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார்.

110 கோரிக்கை மனுக்கள்

பின்னர், கடந்த மாதத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,   பிற துறைகளை சார்ந்த 77 மனுக்கள், மீன்வளத்துறைகளை சார்ந்த 23 மனுக்கள் மற்றும் தனிநபர்களை சார்ந்த 10 மனுக்கள் என மொத்தம் 110 மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறைஅலுவலர்களால், கலெக்டர் முன்னிலையில், தெரிவிக்கப்பட்டது.

 திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலன் கருதி, மீனவர்களுக்கு தனி வீட்டு வசதி திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்தார்கள்.  இத்திட்டத்தின்கீழ், மீனவர்களுக்கு இலவச வீடுகள் வழங்குவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டதும், நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ராமர் குளம் என்ற வைகை குளம் மற்றும் நீலகண்டபிள்ளை பெரியகுளம் ஆகியவற்றின் மீன்பிடி குத்தகை உரிமை, தோவாளை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு மூலமாக சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், இணையம்புத்தன்துறை கிராமத்தில் முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகள், நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு நடவடிக்கை

மிழக அரசின் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும், வறட்சி நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்பணிகள் முடிவுற்றபின்னர், ராமன்துறை 16-ம் அன்பிய பகுதியில், இதர பணிகள் மற்றும் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், ஏ.வி.எம். கால்வாயில், மண்டைக்காடு முதல் தேங்காப்பட்டணம் வரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீனவர் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர்  பெற்றுக் கொண்டார்.      

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி)  திட்ட இயக்குநருமான  ஏ.ஆர். ராகுல் நாத்  துணை இயக்குநர் (மீன்வளத்துறை) லேமக் ஜெயகுமார், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை)  எஸ். ரூபர்ட் ஜோதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மீனவ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து