முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிவினைவாத இயக்க தலைவர் யாசின் மாலிக் கைது

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : சுட்டுக்கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகளின் வீடுகளுக்கு சென்றதையொட்டி ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக் நேற்று கைது செய்யப்பட்டார்.

காஷ்மீல் குறிப்பாக அதன் தெற்குபகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலும் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனையொட்டி இந்திய ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தீவிரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்து முக்கிய தீவிரவாதிகள் ஜப்ஷர் அகமத் பத்,பெஷன் முஷாபர் ஆகிய 2 தீவிரவாதிகளும்  இதில் அடங்கும். இவர்களின் வீடுகள், தெற்கு காஷ்மீர் பகுதியில் இருக்கும் புல்வாரா மாவட்டத்தில் உள்ள  திரல் என்ற இடத்தில் உள்ளன.  இதில் ஒருவன் கமாண்டர் என்று கூறப்படுகிறது. அந்த 2 தீவிரவாதிகளின் இல்லங்களுக்கு பிரிவினைவாதியும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்க தலைவருமான முகமது யாசின் மாலிக் சென்று துக்கம் விசாரித்தோடு அவர்களின் குடும்பத்தினர்களை கலவரத்திற்கு தூண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையொட்டி யாசின் மாலிக் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் அருகே மைசுமாவில் இருக்கும்   வீட்டில் யாசின் மாலிக் இருக்கும்போது கைது செய்யப்பட்டார். அவர் ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த 2 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  முகமத் யாசின் மாலிக்கும் மற்றும் ஹூரியத் மாநாடு கட்சிகளின் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, மீர்வாஸ் உமர் பரூக் ஆகிய 3 தலைவர்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2 நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையொட்டி முகமத் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து