இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இலவச தாய் சேய் நல ஊர்தி கலெக்டர் எ.சுந்தரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 29 மே 2017      திருவள்ளூர்
Thiruvallur  2017 05 29

திருவள்ளுர் மாவட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவள்ளுர் மாவட்ட கிளை சார்பாக "இலவச தாய் சேய் ஊர்தி" துவக்க விழா மாவட்ட கலெக்டர் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட தலைவர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை

மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தலைவர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவள்ளுர் மாவட்ட கிளை "இலவச தாய் சேய் ஊர்தி" யை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டத்தில் திருவள்ளுர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (குடும்ப நலம்) டாக்டர்.பி.யு. தயாளன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் பி.ஆர்.நாகேந்திரன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சுகாதாரக் குழு தலைவர் டி.எல். நந்தகோபால், திருவள்ளுர் மாவட்ட தாய் சேய் ஊர்தி ஒருங்கிணைப்பாளர் இ.தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து