முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மாட்டிறைச்சி திருவிழா: மதசார்பற்றவர்கள் அமைதியாக இருப்பது ஏன்? யோகி ஆதித்யாநாத் கேள்வி

திங்கட்கிழமை, 29 மே 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, கேரளாவில் நடுரோட்டில் மாட்டை வெட்டி மாட்டிறைச்சி திருவிழா நடத்திருப்பதற்கு மதசார்பற்றவாதிகள் அமைதியாக இருப்பது ஏன் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசுவதற்கும் மாடுகள் மீது ஆபரண பொருட்களை வைத்து அலங்காரம் செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.  இதற்கு கேரளா உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தடையை அமுல்படுத்தப்போவதில்லை என்று கேரள இடதுசாரி கூட்டணி அரசு முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளத்தில் உள்ள கண்ணூர் நகரில் மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்பட்டுள்ளது. திருவிழாவின்போது நடுரோட்டில் காளை மாட்டை வெட்டி சமைத்து திருவிழா நடத்தியதோடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரிஜில் மகுல்தி என்பவர் தலைமையில் மாட்டுத்தலையுடன் ஊர்வலமாக சென்றதாக கூறப்படுகிறது. கொல்லத்தில் மாவட்ட காங்கிரஸ் அலுவலத்திற்கு முன்பு மாட்டிறைச்சியை  சமைத்து சாப்பிட்டனர். மேலும் மாட்டிறைச்சியை பார்சலில் பிரதமர் மோடிஜிக்கு அனுப்பப்படும் என்று மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடந்த மாட்டிறைச்சி திருவிழாவில் கேரள சுற்றுலா மற்றும் தேவஸ்தான அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தரன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி பரிமாறப்பட்டது.  இதற்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கும்மனம் ராஜசேகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மாடு வெட்டப்பட்டது பற்றி வீடியோ படத்தையும் வெளியிட்டுள்ளார். மாடுகளுக்கு இழைக்கப்படும் கொடுமை மாநிலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சாதாரணமான மனிதன் இந்தமாதிரியான கொடூர செயலில் ஈடுபடமாட்டான் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்திலும் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா முதல்வர் யோகி ஆதித்யாநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடந்துள்ள மாட்டிறைச்சி திருவிழா குறித்து மதசார்பற்றவர்கள் எதுவும் கூறாமல் மவுனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஒவ்வொருவரின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று மதசார்பற்ற என்ற பெயரில் பல அமைப்பும் கூறிவருகின்றன. ஆனால் மத்திய அரசின் தடைக்கு எதிராக கேரளாவில் நடந்துள்ள கொடூரமான மாட்டிறைச்சி திருவிழா குறித்து இந்த அமைப்புகள் மவுனம் சாதிப்பது ஏன் என்றும் ஆதித்யா நாத் கூறியுள்ளார். லக்னோவில் அகில பாரதிய வித்யார்த் பரிஷத் சார்பாக நடந்த கூட்டத்தில் பேசுகையில் இந்த கேள்வியை ஆதித்யாநாத் எழுப்பியுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous May 30, 19:12

    உத்தர பிரதேசத்துல அங்கே மனுஷனா வெட்டுறே அது தப்பு இல்லே மாட வெட்டி சாப்பிடுவது தப்பா? நீ மாடா பொரந்திரக்குனு
    ..

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து