முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேகாரஅள்ளி கிராம மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ. 52 லட்சத்து 27ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

புதன்கிழமை, 31 மே 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பேகாரஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் திரு கே. விவேகானந்தன், தலைமையில் நேற்று (31.05.2017) நடைபெற்றது.

நிவாரணத்தொகை

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் விபத்து நிவாரண உதவித் தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ. 5 இலட்சத்து 12 ஆயிரத்து 500ஃ-ம், சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் உதவி தொகை 32 பயனாளிகளுக்கு ரூ. 38 இலட்சத்து 40 ஆயிரமும், திருமண உதவித் தொகை 23 பயனாளிகளுக்கு ரூ. 1 இலட்சத்து 84 ஆயிரமும், இயற்கை மரண உதவித் தொகை 27 பயனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 37 ஆயிரத்து 500-ம், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ. 66 ஆயிரமும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு மா அடர் நடவு ரூ. 19 ஆயிரத்து 600-ம், 2 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசன இடுபொருள் ரூ. 1 இலட்சத்து 16 ஆயிரத்து 100-ம், வேளாண்மைத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு துவரை விதை மற்றும் 2 பயனாளிகளுக்கு காரமணி விதை ரூ. 2 ஆயிரத்து 191-ம், பட்டா மாற்றம் மற்றும் தனிப்பட்டா 23 பயனாளிகளுக்கும், இதர சான்றிதழ்கள் 41 பயனாளிகளுக்கும் என மொத்தம் 171 பயனாளிகளுக்கு ரூ. 52 இலட்சத்து 27 ஆயிரத்து 853- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட அலுவலர்கள் மாதந்தோறும் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, புதுவாழ்வுத் திட்டம் என அரசின் பல துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தனிநபர் கழிப்பறை அமைக்க அரசு ரூ. 12 ஆயிரம் மானியம் வழங்குகிறது. அதனை பெற்று தனிநபர் கழிப்பறை அமைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். பொதுமக்கள் தனிநபர் கழிப்பறையை அமைப்பதற்கு அந்தந்த வட்டத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே விண்ணப்பித்து பயன்பெறலாம். காரிமங்கலம் வட்டத்தில் 1000 ஹெக்டர் அளவிற்கு மானாவாரி நிலங்களை உழவு செய்ய உழவு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்திற்கு சமூக பொருளாதார கணக்கெடுப்பு விதியை தளர்வு செய்யப்பட்டு இந்திரா குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்டத்தில் 4800 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனை பட்டா 11000 வழங்கம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காரிமங்கலம், பாலக்கோடு 1500 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சுமார் 4,00,000 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் நபர்கள் மனு மீது உரிய விசாரணை செய்து ஒருவார காலத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 48 டன் அரிசி வழங்கப்பட உள்ளது. தற்போது 20 டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த 75 மனுக்கள் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைய மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என கலெக்டர் கே.விவேகானந்தன், பேசினார்.

மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜாதி சான்று, வருமானம் சான்று, இருப்பிடச்சான்றிதழ் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும், பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் அறிய வேண்டுமெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ் அப் எண். 8903891077 ஆகிய எண்களின் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மற்றும் புகார்களையும் கூறலாம். மேலும் அம்மா கைபேசி எண். 1100 எண்ணின் மூலமாக தங்களது குறைகளையும் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.

இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குப்புசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரா.ரா. சுசீலா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் இலாஹிஜான், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரேவதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) மல்லிகா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், தாட்கோ மேலாளர் வைத்தியநாதன், வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து