முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம்: கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் வழங்கினார்

புதன்கிழமை, 31 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் அ.விஜயகுமார் எம்பி முன்னிலையில், படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ், 500 படித்த ஏழை பெண்களுக்கு 4 கிலோ கிராம் தங்க நாணயங்களை நேற்று(31.05.2017) வழங்கினார்

தாலிக்கு தங்கம்

தமிழ்நாடு அரசு, சமூகநலத்துறையின் மூலம், பட்டதாரி அல்லாத ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரமும், பட்டபடிப்பு முடித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 50 ஆயிரமும், திருமாங்கல்யத்திற்கு தலா 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தினை உயர்த்தி, 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் , மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் அவர்கள் முன்னிலையில், சமூக நலத்துறையின் மூலம், திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ், பட்டதாரி அல்லாத 150 ஏழை பெண்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்த 350 ஏழை பெண்கள் என மொத்தம் 500 ஏழை பெண்களுக்கு 4 கிலோ கிராம் தங்க நாணயங்களை மாவட்ட கலெக்்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்;.மேலும், பயனாளிகளுக்கான திருமண நிதியுதவிகள் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் என். சுரேஷ்ராஜன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) பேச்சியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து