முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்துப்பணி மூலம் குளங்களில் விவசாயத்திற்கு தேவையான நீரை அதிக அளவில் தேக்கி வைக்க முடியும்: செய்தியாளர்கள் பயணத்தில் கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்

புதன்கிழமை, 31 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

 

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதிய நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இச்சூழ்நிலையை பயன்படுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளவை அதிகப்படுத்தி, வருங்காலத்தில் விவசாயப் பணிகளை மேம்படுத்திட பயனீட்டாளர்களின் உதவியுடன் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளித்திட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு.கே.பழனிசாமி அவர்களால் 13.03.2017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகள் துவக்கி வைக்கபட்டது. பெருகிவரும் நீர்த்தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளான அணைகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர் கொள்ளளவை அதிகப்படுத்தும் சீரிய திட்டத்ததை செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.=

 

ரூ.100 கோடி செலவு

 

 

 

ரூ.100 கோடி செலவில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் செயல்படுத்தபட்டு, இத்திட்டத்தினை ஒரு மக்கள் இயக்கமாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2017-2018ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு 2,065 பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் குளங்களில் விவசாயிகளுக்கு கரம்பை மண் அள்ளிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குளங்களில் கரம்பை மண் அள்ளும் பணியை மாவட்ட கலெக்டர் எம்.ரவி குமார் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.230.6 இலட்சம் மதிப்பிலான நீர் நிலை குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று வருகிறது. வைப்பார் வடிநில கோட்டப்பகுதிகளில் 10 பணிகள் ரூ.94.80 இலட்சத்திலும், கோரம்பள்ளம்; வடிநில கோட்டப்பகுதிகளில் 13 பணிகள் ரூ.1 கோடியிலும், தாமிரபரணி வடிநில கோட்டப்பகுதிகளில் 5 பணிகள் ரூ.35.80 இலட்சத்தில் என மொத்தம் 28 பணிகள் ரூ.230.6 இலட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வைப்பார், தாமிரபரணி வடிநிலை கோட்டப்பணிகள் நிறைவடைந்தது. கோரம்பள்ளம் வடிநில கோட்டப்பணிகள் 13-ல் 8 நிறைவடைந்தது 5 பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் குடிமராமத்துப்பணிகள் நடைபெறும் குளங்கள் உள்பட்ட 8 தாலுக்காகளிலும் 670 குளங்களில் கரம்பை மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி விவசாயிகள் நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், நீர்நிலைகளிலிருந்து வண்டல்மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வண்டல் மண்

 

மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்காக கூடுதலாக 60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண்ணையும், பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக 30 கனமீட்டருக்கு மிகாமல் வண்டல் மண், சவுடுமண், சரளைமண் ஆகியவற்றை கட்டணமில்லாமல் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வு மேம்;படும்.

இதுவரை மொத்தம் 1 இலட்சத்து 39 ஆயிரத்து 567 கனமீட்டர் அளவுக்கு மண் அள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் குளங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகத்திற்கு அதிக அளவு நீர் தேக்கப்படும். இதனால் நமது மாவட்டத்தில் பாசன வசதி பெறும் அனைத்து விவசாய நிலங்களும் பயன்பெறும் மேலும் மாவட்டத்தின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் பெறுமையுடன் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து