முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் - காட்பாடி இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,  நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ரூ.3475 லட்சம் ஒதுக்கீடு

விழுப்புரம் விழுப்புரம் நகரில் பழைய தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மற்றும் வெங்கடேசபுரம் இரயில் நிலையங்களுக்கு இடையே விழுப்புரம் - காட்பாடி பிரிவில் மேம்பாலம் கட்டுவதற்காக நபார்டு மற்றும் கிராம சாலைகள் உட்கோட்டம் பிரிவு நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.3475.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இப்பணி 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டு, இப்பாலப் பணிகள் முடியும் தருவாயில், அணுகுசாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 

பணிகள் குறித்து ஆய்வு

சென்னை மற்றும் விழுப்புரம் செல்லும் சாலைகளின் பக்கவாட்டில் பலப்படுத்தப்பட்ட சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இப்பணி இன்னும் சில மாதங்களில் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.  இப்பணியினை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்ததாரரிடம் பணியாளர்களை அதிகப்படுத்தி, இணைப்புசாலை பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பலர் பங்கேற்பு

இவ்வாய்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, விழுப்புரம் வட்டாட்சியர் பத்மா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜ், நிலஅளவை வட்ட துணை ஆய்வாளர் மணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து