முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜூலை 9, 23ல் சிறப்பு முகாம்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      திருநெல்வேலி

தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பிழைகளை திருத்தம்  ஜூலை மாதம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஜூலை 9 மற்றும் 23 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

 சிறப்பு முகாம்

நெல்லை  மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் பிழைகளை நீக்கம் செய்யும் வகையில் ஜூலை முதல் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.எந்த ஒரு வாக்காளரும் விடுப்பட்டு விடக்கூடாது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கு இணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18-19 வயதுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, தற்போது நடைபெறும் தொடர் திருத்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

படிவங்களை அளிக்கலாம்

ஜூலை 31 ஆம் தேதி நிறைவுபெறும் இந்த சிறப்பு பணியின்போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களை அளிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதையொட்டி ஜூலை மாதம் 9 மற்றும் 23 ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறன்றன. இந்த முகாமில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பங்களை பெறுவார்கள்.

வேண்டுகோள்

இம்முகாமில் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியும் இடம்பெறஉள்ளது. இறப்பு பதிவு விவரங்களை உள்ளாட்சி அமைப்புகளில் பெற்று அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து