முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலங்கைமானில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை புதிய கட்டிடம் : அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை புதிய கட்டடத்தை நேற்று (4.6.2017) உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி தலைமையேற்க, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் முன்னிலை வகித்தார்.

புதிய கட்டிடம்

உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வலங்கைமானில் பயணியர் மாளிகை புதிய கட்டடம் கட்ட ஆணையிடப்பட்டது. அதன்படி 183 சதுர மீட்டர் பரப்பளவில் 3 அறைகளுடன் கூடிய ரூ.35 லட்சம் மதிப்பில் பயணியர் மாளிகை புதிய கட்டடம் கட்டப்பட்டு இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வலங்கைமான் நகரத்தை சுற்றியுள்ள திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு வரும் பேராசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒய்வெடுக்க இப்பயணியர் மாளிகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு மாவட்ட வளர்ச்சிக்கும் , மக்களின் தேவைகளை உணர்ந்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இரா.அமிர்தலிங்கம், உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் விஜய் , வட்டாட்சியர் இங்ஞாசிராஜ், முன்னாள் அவளிவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி ராஜமாணிக்கம்,முன்னாள் வலங்கைதமான் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால், வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து