முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில கூடைப்பந்தாட்டப் போட்டியில் வென்ற அணிகளுக்கு அமைச்சர் சி.சீனிவாசன் கோப்பை

திங்கட்கிழமை, 5 ஜூன் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,-திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கோப்பை மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் நேருஜி நகர் கூடைப்பந்து கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி நினைவு சுழற்கோப்பைக்கான மாநில கூடைப்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 6ம் ஆண்டாக கடந்த மாதம் 30ம் தேதி முதல் திண்டுக்கல் மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்று வந்தது. 5 நாட்கள் நடந்த இப்போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, உடுமலைப்பேட்டை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்துகொண்டு விளையாடின.
ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் சென்னை ஐ.சி.எப். அணியும், சென்னை கஸ்டம்ஸ் அணியும் மோதின. இதில் 62_59 என்ற புள்ளிகள் கணக்கில் ஐ.சி.எப். அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் சென்னை அரைஸ் ஸ்டீல் அணியும், திண்டுக்கல் ஏ.சி.எல்.எஸ். அணியும் மோதின. இதில் சென்னை அரைஸ் அணி 75_54 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
அதனைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சி.சீனிவாசன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற அணிக்கு பத்மாவதி நினைவு கோப்பையையும், ரூ.30 ஆயிரத்தையும் வழங்கினார். 2ம் இடம் பிடித்த அணிக்கு கோப்பை மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், முன்னாள் மேயர் மருதராஜ், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம்,முன்னாள் கவுன்சிலர்கள் பழக்கடை நாகராஜன், சுப்பிரமணி, சோனா சுருளிவேல், பெனாஸ்ரூம் சலீம், தொழிலதிபர்கள் காஜா மைதீன், ஷாஜகான், யூசுப் அன்சாரி, ஆவின் தலைவர் திவான்பாட்சா, அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரவி செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து