முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டையார்பேட்டை சேனியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      சென்னை
Image Unavailable

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அடங்கிய தண்டையர்பேட்டை அருள்மிகு அகத்திஸ்வரர் மற்றும் சேனியம்மன் திருக்கோயில் ஜீர்ணோதராண அஷ்டபந்தன விமான மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

அபிஷேகம்

திருக்கோயிலில் வீற்றியிருக்கும் விநாயகர், சுப்பிரமணியர், சிவன், கிருஷ்ணர், துர்க்கை, ஆஞ்சநேயர், நவகிரகம், சேனியம்மன் ஆகிய அனைத்து தெய்வங்களுக்கும் சிவஆகமப்படி மகாகும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ.என்.மகாதேவசாஸ்திரிகள் நடத்திவைத்தார். விழாவில் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ., திருக்கோயில் அறநிலையத்துறை உயர்அதிகாரிகள் லட்சுமணன், பா.விஜயா, தெ.வாசுகி, து.ரு.பிரகாஷ், அருட்செல்வன், ரமேஷ் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் டாக்டர் பி.காளிதாஸ், நேதாஜிகணேசன், எஸ்.சந்தானம், எஸ்.ஆர்.அன்பு, ஏ.ஆர்.ஏழுமலை, இரா.முரளிமுருகன் மோகன், நாகராஜ் மற்றும் ஸ்தபதி.ஏ.ஜெயபால் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அர்ச்சகர் பி.எஸ்.பாலசுப்பிரமணிய ஐயர் கும்பாபிஷேகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு புனிதநீர் வழங்கினார். முடிவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து