முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் மு.ஆசியா மரியம் தகவல்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      நாமக்கல்

 

தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் "வேலைவாய்ப்பு முகாம்" மாதந்தோறும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன் - 2017 மாதத்திற்குரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 09.06.2017 அன்று நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி அரசு பரிந்துரைக்கப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கண்காணிப்பாளர், மேலாளர், கணினி பயிற்றுநர்;, கணக்காளர், காசாளர் தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசோசியேட் சூப்பர்வைசர், இரவு காவலர் மற்றும் ஆசிரியர் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு பி.எட்., முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 09.06.2017 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தவிர இதர கல்வித்தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலீக்கப்படுவர் என கலெக்டர் மு.ஆசியா மரியம், கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து