முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வான அனைத்து மாணவர்களையும் சேர்க்க நடவடிக்கை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

புதன்கிழமை, 7 ஜூன் 2017      புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் நேற்று நடந்த விவாதம் வருமாறு:-

 வையாபுரி மணிகண்டன்(அதிமுக);: மருத்துவ பட்டமேற்படிப்பில் 101 அரசு இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை அந்தந்த கல்லூரியில் நானே நேரில் சென்று சேர்ப்பேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். நாளை (இன்று) மாணவர்களை சேர்க்க கடைசி நாள். ஆனால் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க மறுத்து வருகின்றனர். எத்தனை பேர் சேர்ந்துள்ளனர்? என்ற பட்டியலை அரசு அளிக்க வேண்டும். இந்த பிரச்சனை மாணவர்களின் வாழ்க்கையை பற்றியது. இதில்அரசு அலட்சியம்காட்டக் கூடாது. சில கல்லூரிகள் சேர வரும் மாணவர்களை மிரட்டி 5 ஆண்டுக்கு ஒரு பத்திரத்தில்கையெழுத்திடும் படி வற்புறுத்துகின்றனர். இது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று விளக்க வேண்டும்.

அசோக் ஆனந்த்(என்ஆர்.காங்):- என் தொகுதியில் 5 மாணவர்கள் கட்டணத்திற்காக வரைவோலயுடன் சென்றும் சேர்க்கவில்லை. மாணவர்களின் வாழ்க்கைப்பிரச்சனையில் விளையாடாதீர்கள். அவர்களை சேர்க்க உரிய நடவடிக்கi எடுங்கள்.

அன்பழகன்(அதிமுக):- என் வீட்டிற்கும் 20மாணவர்கள்வந்து தங்களை கல்லூரி நிர்வாகம்சேர்க்கவில்லை என புகார் செய்தனர். அவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வரைவோலையாக எடுத்துச் சென்றும் திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் நாங்கள் கவர்னரிடம் செல்லவா? முதல்வரிடம் செல்லவா?என தெரியாமல் கேட்கின்றனர். மாணவர்களை சேர்க்காத கல்லூரியின் தடையில்லா சான்றை ரத்து செய்வோம் என்றீர்களே என்னவாயிற்று?

லட்சுமிநாராயணன்(காங்):- அரசு இவ்விஷயத்தில்கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த சபையின் மாண்புகள் சீர்குலைக்கப்படும். அரசு பெற்ற இடங்கள் குறித்து மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியும் ஏன் இது வரை மாணவர்களை சேர்க்கவில்லை?

முதல்வர் நாராயணசாமி:- கடந்த 31-ந் தேதியே இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தேர்வு செய்யப்பட்டமாணவர்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. பிம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு தேர்வான 22 மாணவர்களில் 10 பேரை சேர்த்துள்ளனர். மணக்குள விநாயகர் கல்லூரிக்கு தேர்வான 31 மாணவர்களில் 21 பேரை சேர்த்துள்ளனர். வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு தேர்வான 9 மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டள்ளனர்சேர்க்கப்படாத மாணவர்கரள கல்லூரியில் சேர்க்க அமைச்சர் பேசி வருகிறார். அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து